சிவ - விஷ்ணு கோவிலில் ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம்
ADDED :3351 days ago
திருவள்ளூர்: சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள ஜலநாராயணருக்கு, நேற்று, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.திருவள்ளூர், பூங்கா நகரில், சிவ -- விஷ்ணு கோவில் மற்றும் ஜலநாராயணர் சன்னிதி உள்ளது. இக்கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, ஜலநாராயண பெருமாளுக்கு, காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, அலங்காரம் மற்றும் அர்ச்சனைகளும், பின், மகாலட்சுமியின் அம்சமான வலம்புரி சங்கில் நெல்லிக்கனி வைத்து, பன்னீர் மற்றும் புஷ்பங்கள் நிறைந்த தீர்த்தத்தை கொண்டு, சுவாமியை வலம் வந்து பக்தர்கள் வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.