உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பிள்ளைகளால் பெருமை

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பிள்ளைகளால் பெருமை

உறுதி மிக்க உள்ளம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் 5-ம் இடத்தில் இருப்பது சிறப்பான நிலை. அவரால்  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம்.  பொருளாதார வளமும்  அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் வளம் காணலாம். புதன் நவ.25-க்கு பிறகு  நன்மைகளை தருவார். சுக்கிரனின் நற்பலன்கள் தொடரும். அவரால் வசதிகள் பெருகும்.  புதன் 7ம் இடத்தில் இருப்பதால், நவ.25 வரை சாதகமாக  இல்லை. இதனால் குடும்பத்தில் சிற்சில  பிரச்னைகள் நிகழலாம். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். அவர் நவ.25-ல்  இடம்  மாறி விடுவதால், இந்த பிரச்னைகள்  அடியோடு மாறி குடும்பத்தில் முழு அமைதி ஏற்படும். தம்பதியினர் ஒன்றுபடுவர். பிள்ளைகளால் பெருமை  கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி ஏற்படும். நவ.16, டிச. 12,13ல் பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். நவ.21,22,23-ல்  உறவினர்கள்  வகையில் ஒதுங்கி இருக்கவும். ஆனால் டிச.8,9-ல் அவர்களால் நன்மை கிடைக்கும்.

தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு லாபத்தில் குறை இருக்காது. பெண்களை
பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும். நவ.25-க்கு பிறகு நல்ல வருமானம்  காணலாம். நவ.26, 27,28-ல்  திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நவ.17,18, டிச.10,11,14,15ல் கல்லா பெட்டியை நீங்களே நேரடியாகக்  கவனிக்கவும். டிச.6க்கு பிறகு செவ்வாயால் போட்டியாளர் வகையில் தொல்லை வரும். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பணியாளர்கள் அதிகமான வேலைப்பளுவை சந்திக்க வேண்டி இருக்கும்.  இருப்பினும் குருவின் பலத்தால் சலுகை கிடைக்கும். அலுவலகத்தில் சி றப்பான நிலையில் இருக்கலாம். வேலையில் திறமை பளிச்சிடும். நவ.25-ல் புதன் சாதக இடத்திற்கு வருவதால் பின் தங்கிய நிலை மறையும்.  ÷ வலையில் தொய்வு இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப் பர். டிச.6,7-ல் எதிர்பாராத வகையில் பொருள் சேரும்.

கலைஞர்கள் எதிர்பார்த்த ஒப்பந்தத்தை பெறலாம். புகழ், பாராட்டு கிடைக்கும். வசதிகள் பெருகும்.

அரசியல்வாதிகள் சுமாரான பலனை காண்பர். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ் பறிக்கப்படலாம். நவ.24,25-ல் மனக்குழப்பம் ஏற்படும்.

மாணவர்கள் மிகவும் சிறப்பான நிலையை அடைவர். ஆசிரியர்கள், சான்றோர்களின் ஆதரவு கிடைக்கும். நவ.25-க்கு பிறகு புதன் சாதகமாக காணப்படுவதால் கல்வியில் நல்ல வளத்தை காணலாம். போட்டிகளில் சிறந்து விளங்க இடமுண்டு.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.  விடாமுயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும். அதிக முதலீடு செய்ய வேண்டாம். மானாவாரி  பயிரில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடைகள் தரும் வருமானம் மகிழ்ச்சி தரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு  விவகாரங்கள் சீராக இருக்கும்.

பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வசதிகள் பெருகும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான  பலனைப் பெறுவர். குடும்ப பிரச்னையில் இருந்து விடுபடலாம். அண்டை வீட்டார் ஆதரவுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப் பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும். நவ.19,20-ல் புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து விழாவுக்கு சென்று வரலாம். நவ.29,30-ல் ச÷ காதரிகளால் பலன் கிடைக்கும். அவர்கள் மிகுந்த ஆதரவுடன் இருப்பர். டிச.6-க்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.  அவசியத் தேவையை தவிர வேறு எந்த ஆசைகளையும் வளர்க்க வேண்டாம். செவ்வாய் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் உடல் நிலையிலும்,  பயணத்தின் போதும் கவனம் வேண்டும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.

நல்ல நாள்: நவ.16,19,20,26,27,28, டிச.6,7, 8,9,12,13.

கவன நாள்:  நவ.29,30, டிச.1- சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்ச்சி  குறித்த பேச்சைத் தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 4,5

நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.  துர்க்கை வழிபாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். தினமும் காலையில் சூரிய தரிசனம்  செய்யுங்கள்.  புதன்கிழமைகளில் குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை கொடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !