சபரிமலையில் சேவையாற்ற விருப்பமா?
ADDED :3298 days ago
ஈரோடு: சபரிமலையில் சேவையாற்ற விரும்புவோருக்கு, ஐயப்ப சேவா சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. சபரிமலையில், மண்டல மற்றும் மகர பூஜை சீசனுக்கு, நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இவர்களுக்கு சேவை செய்ய, அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் மாநில அமைப்பு, கல்லூரி என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தேர்வு செய்து, சபரிமலைக்கு அனுப்புகின்றனர். வரும், மகர விளக்கு பூஜைக்கு சேவை செய்ய விரும்புவோர், ஈரோடு மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அப்பாச்சிமேடு, மரங்கூட்டம் ஆகிய முகாம்களில் தங்கி இருந்து, 12 நாட்கள் பக்தர்களுக்கு அன்னதானம், ஸ்ட்ரெச்சர் சேவை ஆகிய சேவை செய்யலாம். சேவை செய்ய விரும்புவோர், 94427-09596, 94434-95022 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.