உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீநிவாசப்பெருமாள் பிரசாதத்துக்கு சமையலறை வேண்டும்

ஸ்ரீநிவாசப்பெருமாள் பிரசாதத்துக்கு சமையலறை வேண்டும்

முகுந்தகிரி: முகுந்தகிரி கோதண்டராமர் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில் வளாகத்தில், பிரசாதம் சமைக்க சமையல் அறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த, பக்தர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில், முகுந்தகிரி கோதண்டராமர் கோவில் உள்ளது. 2,000 ஆண்டு களுக்கு மேல் பழமை வாய்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான இது, அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. குழந்தை பாக்கியம் கிட்டும் என, பக்தர்களின் நன் மதிப்பை பெற்ற இந்த கோவிலில், பிரார்த்தனை மேற்கொண்டு கிட்டிய பலன் காரணமாக, இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். ஆனால், மதுராந்தகத்தில் உள்ள, கோதண்டராமர் கோவில் பாடசாலையில், அவர்களுக்கான உணவை தயாரித்து, இங்கு எடுத்து வந்து அன்னதானம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மீண்டும் ஏதேனும் கஷ்டம் வருமோ என, வேண்டியவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால், இக்கோவில் வளாகத்திலேயே, பிரசாதம் சமைத்து வழங்க, வசதிகளுடன் கூடிய சமையலறையும், குடிநீர் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !