உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிசம்பர் வரை உண்டியல்களை திறக்கக் கூடாது: கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவு

டிசம்பர் வரை உண்டியல்களை திறக்கக் கூடாது: கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவு

ஈரோடு: தமிழகம் முழுவதும், ஒரே நேரத்தில் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணிக்கை செய்ய, கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 488 கோவில்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பவானி சங்கமேஸ்வரர், பண்ணாரி மாரியம்மன், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரிரங்கநாதர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், திண்டல் வேலாயுதசாமி, கோபி பச்சமலை, பவளமலை கோவில்கள், சென்னிமலை சுப்பரமணியர் கோவில் என, மிகவும் பிரசித்தி பெற்ற, 35 பெரிய கோவில்களும், 1,150 சிறிய கோவில்களும் உள்ளன. இவற்றில், ?? லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள கோவில்களில், மாதம் ஒரு முறை, மற்றவற்றில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிப்பு செய்த பிறகு, இதுவரை உண்டியல்கள் திறக்கப்படவில்லை. அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவுக்காக, கோவில் நிர்வாக அதிகாரிகள் காத்திருந்தனர். இந்நிலையில் மாநிலத்தில் உள்ள, அனைத்து கோவில் நிர்வாக அலுவலர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், டிசம்பர் கடைசி வாரத்தில்தான் உண்டியலை திறக்க வேண்டும், அதுவும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், ஒரே சமயத்தில் எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !