வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் கட்டு கட்டாக பணம்
வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில், நேற்று ஒரே நாளில், 44 லட்சம் ரூபாய் பணம் போடப்பட்டிருந்தது. வேலூர் கோட்டையில் பழமையான ஜலகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இதில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, தினசரி இரவு, 8:00 மணிக்கு, பக்தர்கள் முன்னிலையில் எண்ணப்படும் நேற்று இரவு உண்டியலை திறந்த போது, அதில், 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பக்தர்கள் முன்னிலையில் செயலாளர் சுரஷே் மற்றும் நிர்வாகி சங்கரலிங்கம் ஆகியோர் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 1,000 ரூபாய் கட்டுகள், 30 கட்டுகளும், 500 ரூபாய் கட்டுகள், 28 கட்டுகள் என மொத்தம், 44 லட்சம் ரூபாய் இருந்தது. இதுவரை இந்த கோவிலில் இவ்வளவு பெரியதொகை உண்டியல் வசூல் மூலம் ஒரே நாளில் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு பயந்து, கறுப்பு பணத்தை யாரோ உண்டியலில் போட்டு விட்டு சென்றுள்ளனர் என கோவில் அதிகாரிகள் கூறினர்.