உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: பழங்களினால் சிறப்பு அலங்காரம்

குமாரபாளையம் சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: பழங்களினால் சிறப்பு அலங்காரம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளன்று, அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். நேற்று, குமாரபாளையம் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்திற்கு அன்னத்தினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வெண்டைக்காய், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளாலும், திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளாலும், பல்வேறு மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல், குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில், நாமக்கல், ப.வேலூர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அன்னாபிஷேக விழா நடந்தது. இதுகுறித்து, மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் நிர்வாகி மன்னாதன் கூறியதாவது: அனைத்து உயிர்களும், நிறைந்த வயிற்றுடன் இருக்க வேண்டும். தாவரங்கள் செழிப்பாக வளர்ந்து அதிக தானியங்கள் கிடைக்க வேண்டும். இவற்றுக்கு அடிப்படையான நிலம், நீர், காற்று, மழை, சூரியன், சந்திரன் போன்ற அனைத்து சக்திகளும் குறையாது நமக்கு அருள் வழங்க வேண்டி இந்த அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !