அய்யர்மலை கோவில் பக்தர்கள் கிரிவலம்
ADDED :3295 days ago
குளித்தலை: அய்யர்மலை, சின்னரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில், பவுர்ணமி விழா முன்னிட்டு, கிரிவலம் நடந்தது. குளித்தலை அடுத்த அய்யர்மலை மலைக்கோவிலில், பவுர்ணமி திதியை முன்னிட்டு, குளித்தலை, பஞ்சப்பட்டி, லாலாபேட்டை, முசிறி பகுதி மக்கள், நேற்று மாலை, 5:00 மணியளவில் மலையை சுற்றி, நான்கு கிலோ மீட்டர் தூரம், கையில் பத்தியை ஏந்திவாறு கிரிவலம் வந்தனர். பின், மலையின் மேல் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலையில் அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ஜெயச்சந்திரன் கண்காணிப்பில், கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குளித்தலை, தோகைமலை பகுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல், சின்னரெட்டிப்பட்டி அரப்புளீஸ்வர் மலைக்கோவிலில், பவுர்ணமி விழா முன்னிட்டு, மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றிவந்து, பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.