வளத்தி கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :3364 days ago
அவலுார்பேட்டை: வளத்தியில் சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, வளத்தியில் மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத சனி மகாபிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிேஷகமும், தீபாரதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மருதீஸ்வரர் அருள்பாலித்தார்.