ராகவேந்திரர் கோவிலில் இலவச மருத்துவ முகாம்
ADDED :3295 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சுப்ரீம் லயன்ஸ் சங்கம், அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோவில் வளாகத்தில், நடந்த நிகழ்ச்சிக்கு, சுப்ரீம் லயன்ஸ் சங்கத்தின் சாசனத் தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் கோபி, அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் சின்னசாமி வரவேற்றார். இரண்டாம் துணை ஆளுநர் சரவணன், முகாமை துவக்கி வைத்தார். இதில், கண் பரிசோதனை, நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு பரிசோதனை செய்யப்பட்டது. நிர்வாகிகள் தனபால், சந்திரன், ராஜாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.