உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரிக்கு காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவிரி துலாக்கட்டத்தில் பம்புசெட் மூலம் இரைத்த தண்ணீரில் கடைமுக தீர்த்தவாரி நடைபெற்றது. ஆயிரகணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோனசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. சிவபெமானும் மயில் உருக்கொண்டு இருவரும் ஆனந்தநடனம் மாயூரதாண்டவம் ஆடினர்.பின்னர் சிவமயில் தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்ததத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரீரி கூறி யது. அதைக்கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உரு நீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரா னாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரி மாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வரவேண்டும். நீங்களும் மாயூரநா தர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேடினாள் என்பது ஐதீகம். இ தனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஐப்பதி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதே போல் இவ்வாண்டு கடந்த அக்டோபர் 17ம் தேதி துலா உற்சவ தொடக்க தீர்த்தவாரியும், 30 ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும் நடைபெற்றது. கடந்த 12ம் தேதி திருக்கல்யாணமும், 14ம் தேதி திருத் தேரோட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து 15ம் தேதி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம்வ ளர்த்த நாயகி சமேத ஐய்யாறப்பர், தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதன் ஆகிய சுவாமிகள் மதியம் 2.30 மணியளவில் காவிரி துலாக்கட்டம் இருகரையிலும் எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னி தானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் துலாக்கட்ட படித்துறையில் குழாய்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்ட இடத்தில் மதியம் 2.50 மணியளவில் சுவாமி தீர்த்தம் கொடுக்க திரளான பக்தர்கள் போர்வெல் தண்ணீரியில் புனித நீராடினர். இதில் சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர்கள் ஞானசே கரன், மாரியப்பன் மற்றும் வர்த்தகர் சங்க பொறுப்பாளர்கள், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தண்ணீர் இல்லை: இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வராததால் காவிரி துலாக்கட்டம் படித்துறையில் புதியதாக போர்வெல் அமைத்து இருபுறமும் மணலால் அணைகட்டு குளம்போன்று தண்ணீ ரை தேக்கி வைத்திருந்தனர். சுவாமி தீர்த்தம் கொடுக்க வருவதற்குள் பக்தர்கள் கூட்டத்தினால் அணை உடைந்து தண்ணீர் ஓடியதால் பக்தர்கள் நீராடுவதற்கு தண்ணீர் இல்லை. தீர்த்தம் கொடுக்கும் நேரத்தில் இருகரைகளிலும் படித்துறை பகுதியில் குழாயி மூலம் மோட்டார் நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கடைமுக தீர்த்தவாரியின் போது எப்போதும் மழைபெய்யும் இந்த ஆண்டு வெயில் சுட்டெரித்த நிலையில் சுவாமி தீர்த்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !