விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா: கல்பாத்தியில் ரதசங்கமம்!
ADDED :3363 days ago
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில், விசாலாசி சமேத விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா, கடந்த 14ல் துவங்கியது. முதல் நாள் விழாவில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி, சுப்பிரமணியர், விநாயகர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நான்கு வீதிகளிலும் பவனி வந்தன. நேற்று காலை 10.50 மணியளவில் பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும் சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவிலிலும் ரத உற்சவம் நடைபெற்றன. மாலையில் பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் தேர், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவில் தேர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர்கள் இரவில் ஜொலித்த வண்ணவிளக்குகளுடன் தேர்முட்டியில் சங்கமித்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தன.