உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் இன்று துவக்கம் 3 நாட்கள் நடக்கிறது

கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் இன்று துவக்கம் 3 நாட்கள் நடக்கிறது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடை பெறுகிறது. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றான கச்சபேஸ்வரர் கோவிலின் தெப்போற்சவம், ஐப்பசி மாதத்தில், தாயார் குளத்தில் நடந்து வந்தது; கடந்த ஆண்டு முதல், கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் நடந்து வருகிறது. தற்போது குளத்தில் போதுமான தண்ணீர் இருக்கிறது. இன்று இரவு, 7:00 மணிக்கு, சுந்தராம்பிகை அம்பாளுடன் - கச்சபேஸ்வரர், குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள்வார். முதல் நாள் மூன்று சுற்றும் மறுநாள் ஐந்து சுற்றும் கடைசி நாள் ஏழு சுற்றும் சுவாமி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இந்த விழாவை காண அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் வருவர். அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !