உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்த்ராலயத்தில் வனபோஜன வைபவம்

மந்த்ராலயத்தில் வனபோஜன வைபவம்

விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு ஸ்ரீ அபிநவ மந்த்ராலயத்தில் தாத்ரிஹவனம் மற்றும் வனபோஜன வைபவம் நடந்தது. இதையொட்டி, வண்டிமேடு ஸ்ரீ அபிநவ மந்த்ராலயத்தில் காலை ௯.௦௦ மணிக்கு தாத்ரிஹவனம் நடந்தது. தொடர்ந்து ௧௧.௦௦ மணிக்கு நெல்லி மரத்தில் தாமோதிர சுவாமிகள் எழுந்தருளியதை யொட்டி, வனப்பகுதிகளில் நடக்கும் வனபோஜன வைபவ யாகம், கோவிலில் நடந்தது. இந்த கோவிலில் கடந்த ௧௨ம் தேதி துளசி, தாமேதிர சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் ராகவேந்திரர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !