காசிக்கு போனால் சிலவற்றை விட வேண்டும்! என்பதன் தத்துவம் என்ன?
ADDED :3645 days ago
காசிக்கு சென்றால்... என்று கூறப்படுவது சரியல்ல கயாவுக்குச் சென்றால் என்று கூறப்படுவதே சரியாகும். கயாவில் தான் பித்ருக்களுக்காக சிரார்த்தம் செய்யும்போது, எதை விடுகிறீர்கள்? என்று கேட்பர். நமக்கு பிடித்தமான பழம், காய், இலைகளை விட வேண்டும். அதாவது ஆசை, காமம், கோபம் ஆகியவற்றை விடவேண்டும் என்பது இதன் உட்பொருள்.