புதுச்சேரியில் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்
ADDED :3272 days ago
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நேற்று, ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து, விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம். நேற்று கார்த்திகை மாதம் முதல் நாள் என்பதால், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில், பாரதிபுரம் அய்யப்ப சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் காவி உடை அணிந்து, குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டு விரதத்தை துவக்கினர்.