உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களை காண, நேற்றும், இருநுாறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் குவிந்தனர். மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த, ‘லேண்ட் டிஸ்கவரி’ என்ற சொகுசு கப்பல் மூலம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளைச் சேர்ந்த, 1,500 பேர், நேற்று சென்னை வந்தனர். அவர்களில், 200க்கும் மேற்பட்டவர்கள், நேற்று மாமல்லபுரத்தில் குவிந்தனர். சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர் கூறும்போது, ‘கப்பலில் வந்தவர்களில், இருநுாறுக்கும் மேற்பட்டோர், குழுவாக வந்தனர்; நாளையும் ஏராளமானோர் வருகின்றனர்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !