சபரிமலையில் வழிபாடு கட்டணம் அதிகரிப்பு: படிபூஜை கட்டணம் 75 ஆயிரமாக உயர்வு!
சபரிமலை, சபரிமலையில் வழிபாடு மற்றும் பிரசாத கட்டணங்களை ஒன்று முதல் மூன்று மடங்கு வரை தேவசம்போர்டு அதிகரித்தது. இதில் சில கட்டணங்களை கோர்ட் தலையிட்டு குறைத்தது.
சபரிமலையில் இந்த ஆண்டு வழிபாடு மற்றும் பிரசாத கட்டணங்களை அதிகரித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகரித்து உத்தரவிட்டது. இதன் படி முக்கிய வழிபாடு பிரசாதமான அரவணை ஒரு டின் 60 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு பாக்கெட் அப்பம் 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இதை ஐகோர்ட் நியமித்த நீதிபதி 35 ரூபாயாக குறைத்து உத்தரவிட்டார். இதுபோல சகஸ்ரகலம், களபாபிஷேகம், லட்சார்ச்சனை, உஷபூஜை ஆகியவற்றில் புதிய கட்டணத்தில் கோர்ட் குறைவு ஏற்படுத்தியது.
இதர கட்டணங்கள் விபரம் ரூபாய் மதிப்பில் வருமாறு: பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. கணபதிஹோமம் 300 (200), உஷபூஜை 750 (501), உச்சபூஜை 2500 (2001), நித்யபூஜை 3000 (2501), அர்ச்சனை 50 (20), சுயம்வர அர்ச்சனை 50 (25), மஞ்சள், குங்கும அபிஷேகம் 40 (25), பஞ்சாமிர்த அபிஷேகம் 100 (20), சர்க்கரை பாயாசம் 20 (15), வெள்ளை நிவேத்யம் 20 (10), அடை நிவேத்யம் 50 (25), அபிஷேகம் செய்த நெய் 100 (60), நீராஞ்சனம் 100 (75), விபூதிபிரசாதம் 25 (15), பூஜை செய்த மணி 50 (40), பூஜை செய்த மணி பெரியது 100 (70), அய்யப்ப சக்கரம் 200 (120), சோறு கொடுத்தல் 250 (100), நாமகரணம் 100 (70), முழுக்காப்பு 750 (500), வெள்ளி அங்கி அணிவிப்பு 5000 (4000), புஷ்பாபிஷேகம் 10,000 (8500).
பக்தர்கள் பொருட்கள் கொண்டு வரவேண்டிய வழிபாடுகள் சகஸ்ரகலசம் 40000 (25000), லட்சார்ச்சனை 8000 (4000), அஷ்டாபிஷேகம் 5000 (3500), களபாபிஷேகம் 6000 (3000), துலாபாரம் 500 (250), உதயாஸ்தமன பூஜை40000 (25000), உற்சவபலி 30000 (10000), படிபூஜை 75000 (40000).
மாளிகைப்புறம்: பகவதிசேவை 2000 (1000), ஒரு விக்ரக பூஜை 50 (20), நவக்கிரக பூஜை 250 (100), நாகர் பூஜை 100 (25), வரப்பொடி நிவேத்யம் 20 (15), மலர் நிவேத்யம் 20 (15), உடையாடை சார்த்து 25 (15).