உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 108 அடி உயர கோபுர திருப்பணி

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 108 அடி உயர கோபுர திருப்பணி

உவரி: திருநெல்வேலி மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில், 108 அடி உயர கருங்கல் ராஜகோபுர திருப்பணி நடக்கிறது.திருச்செந்துாரில் இருந்து, 38 கி.மீ., தொலைவில் இக்கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலின் மூலவருக்கு ஆவுடைபாகம் இல்லை. சுவாமியின் அடி பாகத்தை தோண்டிய போது, பூமிக்கடியில் நீண்டு கொண்டே சென்றதை அறிந்து, பெரிய சுவாமி என, பெயரிட்டனர்.ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளியில், மாதாந்தம் விழா நடக்கும். இதில், கொடிய நோய்கள் நீங்க பக்தர்கள் வழிபடுகின்றனர். இதற்காக, 11 அல்லது 41 ஓலை பெட்டிகளில், கடற்கரை மணலை சுமந்து வந்து கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துவர்.தற்போது, 108 அடி உயர கருங்கல் ராஜகோபுரத் திருப்பணி நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர், 94435 07973 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின், 235 103 108 75022 சேமிப்பு கணக்கிலும் பணம் செலுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !