உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு

ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு

ராசிபுரம்: ராசிபுரம், மாரியம்மன் கோவில் ஐப்பசி மாத திருத்தேர் பெருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த அக்., 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நவ., 1ல், கொடியேற்றம், 3ல், அக்னி குண்டம் இறங்குதல் நடந்தது. கடந்த, 5ல், சப்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது. நவ.,7 முதல், கட்டளை நிகழ்சிகள் நாள்தோறும் நடந்து வந்தன. இதில், மாரியம்மனை பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவாக எடுத்து வந்தனர். இறுதி நாளான நேற்று, பூஜை தட்டுகளை சுமந்து வந்த பெண்கள், நகரை சுற்றி வந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !