உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடன் வேண்டாம்!

கடன் வேண்டாம்!

குருவிடம், எது பெரிய தீட்டு? என்று சீடன் ஒருவன் கேட்டான். நாம் வாங்கும் கடன்! என்ற குரு, அதற்கு விளக்கம் சொன்னார். தீட்டுகள் குறிப்பிட்ட காலத்தில் முடிந்துவிடும். சில தீட்டுகள் நீராடினால் முடியும். ஆனால் நாம் வாங்கிய கடன் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே முடியும். அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியவர்களை உறவுகள்கூட நெருங்கப் பயப்படுவார்கள். சாகும் வரை கடனாளியாக இருந்தவர்களும் உண்டு. எனவே கடனைவிடப் பெரிய தீட்டு எதுவும் கிடையாது என்றார், குரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !