போர் வீரனான ஐயப்பன்!
ADDED :3643 days ago
மதுரை விளாச்சேரி, முனியாண்டிபுரத்தில் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் ஐயப்பன் ராஜதேஜஸ், சின் முத்திரையுடன், யோகாசனத்தில், யோகப் பட்டயத்துடன் சபரிமலையை நோக்கியபடி அமர்ந்துள்ளார். போர் வீரனாக மதுரை பாண்டிய மன்னரிடம், பாண்டிச்சேவகம் செய்துள்ளார் ஐயப்பன். அதன் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டன. பிரதான தெய்வமாக ஐயப்பன் அருள்பாலிக்க, பார்வதி, கணபதி, பகவதி, சிவன், குருவாயூரப்பன், சுப்பிரமணியர் மற்றும் நவகிரக சன்னிதிகளும் அமைந்துள்ளன. திருமணத்தடை நீக்கம், குழந்தை பாக்கியம், கல்வியில் மேன்மைபெற இங்கு இறையருள் கிடைக்கும். மூன்று கால பூஜை நடக்கும் இக்கோயிலில் தினமும் அதிகாலையில் அஷ்ட திரவிய மகாகணபதி ஹோமம் நடைபெறுகிறது.