உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் மண்டபம் கட்டப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு!

கோவில் மண்டபம் கட்டப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு!

பீர்க்கன்காரணை: கிடப்பில் இருக்கும், சூராத்தம்மன் கோவில் மண்டபத்தை, விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என, பக்தர்கள்  கோரிக்கை எழுப்பி உள்ளனர். பீர்க்கன்காரணை, ஸ்ரீனிவாசா நகரில், பிரசித்தி பெற்ற, சூராத்தம்மன் திருக்கோவில் உள்ளது. தமிழ்நாடு  இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, இந்த கோவிலின் அருகே, திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கோவிலில்  திருமணம் செய்ய வரும் பக்தர்கள், குறைந்த செலவில், மண்டபத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில், தனியார் பங்களிப்புடன்  பணிகள் நடந்தது. மண்டபத்தின் கட்டுமான பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இது குறித்து,  அப்பகுதிவாசிகள் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக, எந்தவித மண்டப கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை. 30 லட்சம்  ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால், எஞ்சிய பணிகள் முடியாமல் உள்ளது. அறநிலையத்துறையினர்,  எஞ்சியுள்ள பணிகளை முடித்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !