உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணைமலையில் திருப்படி திருவிழா

வெண்ணைமலையில் திருப்படி திருவிழா

கரூர்: வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், 42வது திருப்படி திருவிழா நடந்தது. கரூர் மாவட்டம், வெங்கமேடு அடுத்த நேரு நகரில் இருந்து நேற்று காலை, 8:00 மணியளவில், ஏராளமான பக்தர்கள், பால் தீர்த்த குடம், காவடிகள் எடுத்துக் கொண்டு, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர். பின், மலைக்காவலர் சுவாமியை வழிபட்டு, ஜெகநாத ஓதுவார் முன்னிலையில், திருப்புகழ் பாடி படிபூஜை செய்தனர். தொடர்ந்து, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !