ராமர் பஜனை மடத்திற்கு 1ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :3352 days ago
கடலுார்: வசந்தராயன்பாளையம், ராமர் பஜனை மடத்திற்கு வரும் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கடலுார் முதுநகர் அடுத்த வசந்தராயன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமர் பஜனை மடம் புதுப்பிக்கப்பட்டது. அதனையொட்டி வரும் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனையொட்டி வரும் 29ம் தேதி மாலை எஜமான் சங்கல்பத்துடன் பூஜை துவங்கி யாக பூஜை நடைபெறுகிறது. 1ம் தேதி காலை 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, அக்னிப்ரணயனம், கும்ப ஆறாதனம் மகா பூர்ணாகுதியை தொடர்ந்து 8:30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.