வேணுகோபால சுவாமி கோவிலில் கார்த்திகை 24ல் கும்பாபிஷேகம்
ஆர்.கே.பேட்டை: ருக்மணி, சத்யபாமா உடனுறை சந்தான வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும், 9ம் தேதி நடைபெற உள்ளது. 7ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரத்தில் அமைந்துள்ளது, ருக்மணி, சத்யபாமா உடனுறை சந்தான வேணுகோபால சுவாமி கோவில். இந்த தலத்தில் பெருமாள், கஷ்யப மகரிஷிக்கு பெருமாள் தரிசனம் தந்ததாக ஐதீகம். ஆனந்த நிலைய விமானத்தின் கீழ், வேணுகோபால சுவாமி, பசுவின் மீது சாய்ந்து நின்றபடி, வேணு கானம் இசைத்தபடி வீற்றிருக்கிறார். இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள், சில மாதங்களாக நடந்து வந்தன. பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், வரும் கார்த்திகை 24ம் தேதி (டிச., 9) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜை, 7ம்தேதி மாலை சர்வ சுத்தி வாஸ்துவுடன் துவங்குகிறது. மறுநாள், காலை, 8:00 மணிக்கு, அஷ்டபந்தனம், 10:30 மணிக்கு பூர்ணாஹூதியும், இரவு, 7:00 மணிக்கு, ரக்ஷா பந்தனம், உக்தஹோமம் நடக்கிறது. வரும், 9ம் தேதி, காலை, 8:30 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை, 5:00 மணிக்கு, திருக்கல்யாணமும், இரவு, 8:00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடக்கிறது.