உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் தபால் சேவை

சபரிமலையில் தபால் சேவை

கோவை: சபரிமலையில் தற்காலிக தபால் நிலைய சேவை, 17ம் தேதி முதல் செயல்படத் துவங்கி உள்ளது. சபரிமலையில் சீசன் நேரத்தில், ஆண்டு தோறும் தற்காலிக தபால் நிலையம் திறக்கப்படும். நடப்பாண்டு, 17ம் தேதி துவக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், ஜன., 19 வரை செயல்படும். ஸ்பீடு போஸ்ட், இ  மணியார்டர், பதிவுத் தபால் உள்ளிட்ட சேவைகள் உள்ளன.இது குறித்து, கேரள மாநில தபால் துறை அதிகாரி கூறியதாவது: ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும், காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை, தபால் நிலையம் செயல்படும். இங்கு வந்து சேரும் அனைத்து தபால்களிலும், பதினெட்டு படி சிறப்பு முத்திரை அச்சிடப்படுகிறது. அலைபேசி ரீசார்ஜ் கார்டுகளும் விற்பனைக்கு கிடைக்கும்.இந்த தபால் நிலையத்தின், தற்காலிக பின் கோடு எண், 689 713 ஆகும். விபரங்களுக்கு, 04735  202 130 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !