வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூச விழா
ADDED :3283 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூச விழா நடந்தது. வணிகர் பேரவை மாவட்ட தலைவர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம், விநியோகஸ்தர் சங்க செயலாளர் அசோக், குசேலன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி வரவேற்றார். மன்ற பூசகர்கள் சிவஞானஅடிகள், தமிழ்மணி அடிகள் முன்னிலை வகித்தனர். இதையடுத்து மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வெங்கடேசன், நடேசன், கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.