உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருவளூர் கோட்டீஸ்வரருக்கு 108 தீர்த்த குடம் அபிஷேகம்

பெருவளூர் கோட்டீஸ்வரருக்கு 108 தீர்த்த குடம் அபிஷேகம்

செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரருக்கு 108 தீர்த்த குடம் அபிஷேகம் செய்தனர். செஞ்சி அருகே உள்ள பெருவளூர் கோகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோவிலில், பெண்கள் 108 தீர்த்த குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். முன்னதாக கோட்டீஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு தீர்த்த குட நீர் கொண்டு கோட்டீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !