உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் வசதிக்காக பம்பையில் ரயில்வே முன்பதிவு மையம் பிளாஸ்டிக் தடுப்பு சோதனை தீவிரம்

பக்தர்கள் வசதிக்காக பம்பையில் ரயில்வே முன்பதிவு மையம் பிளாஸ்டிக் தடுப்பு சோதனை தீவிரம்

சபரிமலை, பக்தர்கள் வசதிக்காக பம்பையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு ரயிலில் வரும் பக்தர்கள் செங்கன்னூர் அல்லது கோட்டயம் ரயில் நிலையங்களில் வந்து அங்கிருந்து பஸ் அல்லது தனியார் வாகனம் மூலம் பம்பை வரவேண்டும். இவ்வாறு ரயிலில் வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக ரயில்வே துறை சார்பில் பம்பையில் ஆஞ்சநேயா ஆடிட்டோரியம் அருகில் முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களையும் போல காலை எட்டு முதல் இரவு எட்டு மணி வரை இந்த மையம் செயல்படும். எல்லா ரயில்களுக்கும் இங்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். செல்லாது என அறிவிக்கப்பட்ட 1000,500 ரூபாய் நோட்டுகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் எடுக்கப்பட மாட்டாது. சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் ஊரில் இருந்து கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாலிதீன் பைகள் சபரிமலை வராமல் தடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கேரள அரசு பஸ்களும், தனியார் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுகிறது. பக்தர்கள் பாட்டில், பாலிதீன் பைகள் கொண்டு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !