சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா
ADDED :3280 days ago
மேட்டுப்பாளையம்: பகவான் சத்ய சாய்பாபாவின், 91 வது பிறந்த நாள் விழா, மேட்டுப்பாளையம் சத்யசாய் சேவா சமிதி சார்பில் நடந்தது.இவ்விழாவில் ஓம்கார சுப்ரபாதம், சங்கீர்த்தனம், கொடியேற்றம், நாராயணசேவை, வஸ்திரதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் சாய் வாசுதேவன், மனோஜ் ஆகியோரின் பஜனை நடந்தது.சாயிபாபாவின் சத்யா, தர்மா, சாந்தி, பிரேமா மற்றும் அஹிம்சா ஆகியவற்றை போதிக்கும் சிறப்பு பஜனை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கோபால் தலைமை வகித்தார். சாய்பிரசாத் வரவேற்றார். சிறப்பாக பணியாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு டாக்டர் கோபிநாத் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாகேஸ்வரராவ் நன்றி கூறினார்.