மங்காமல் காத்த ஐயனார்!
ADDED :3636 days ago
கடலூர், காட்டுமன்னார்குடி வட்டம், திருநாரையூரில் ஒரு ஐயனார் கோயில் உள்ளது. கர்ப்பிணி ஒருத்தி இவ்வூரைக் கடந்தபோது பிரசவ வலியால் வேதனைப்பட, இந்த ஐயனார் ஒரு பெண்ணாக உருமாறி, அவளுக்குப் பிரசவம் பார்த்தார். பின் தான் யார் என்பதையும் அவளுக்கு உணர்த்தினார். குலத்தை மங்காமல் காத்ததால் இவர் மங்காமல் காத்த ஐயனார் எனப்படுகிறார்.