உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குந்தி வரம் பெற்ற இடம்

குந்தி வரம் பெற்ற இடம்

உத்திராஞ்சல் மாநிலத்தில் உள்ளது கபிலேஷ்வர் எனப்படும் கல்பநாத் கோயில். பஞ்சகேதாரில் இதுவும் ஒன்று. இங்கே, வெட்டப்பட்ட ஒரு பாறையின் சிறு துண்டை லிங்கமாகக் கருதி பக்தர்கள் வணங்குகின்றனர். இதையே சிவபெருமானின் முடி என்றும் நம்புகிறார்கள். இங்குதான் முனிவர் அர்க்யா என்பவர் பாவ பரிகாரத்திற்கு ஊர்வசியை உண்டாக்கினாராம். இங்குள்ள கல்ப விருட்சத்தின் அடியில் துர்வாச முனிவர் நீண்ட காலம் தவம் செய்தார். இத்தலத்தின்தான் துர்வாச முனிவர், பாண்டவர்களின் தாயார் குந்திதேவிக்கு இயற்கையின் எந்த உருவத்தையும் வேண்டி வரவழைக்கும் மந்திரத்தை அருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !