குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள்
ADDED :3276 days ago
கிருஷ்ணராயபுரம்: திருக்காம்புலியூர் பஞ்சாயத்து, சின்னமலைப்பட்டி பகுதியில், ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, ஐயப்ப பக்தர்கள் குண்டம் இறங்கினர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, திருக்காம்புலியூர் பஞ்சாயத்து, சின்னமலைப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் முன், ஐயப்பன் திடலில் குண்டம் இறங்குவதற்கான பணிகள் நடந்தன. நேற்று இரவு, 7:00 மணியளவில் ஐயப்பன் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள், ஒவ்வொருவராக குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் தாலுகா சுற்று வட்டார பகுதியில் இருந்து, 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஏற்பாடுகளை, சின்னமலைப்பட்டி ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.