உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கார்த்திகை இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஐயப்பன் மற்றும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. குமாரபாளையம் நகரில், நேற்று கார்த்திகை இரண்டாம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அம்மன் நகர் ஐயப்பன் கோவில், ராஜா வீதி, சேலம் பிரதான சாலை சவுடேஸ்வரியம்மன் கோவில், கலைமகள் வீதி, கோட்டைமேடு காளியம்மன் கோவில், தேவாங்கர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !