குரு பகவானுக்கு பூசணி, தேங்காய் தீபம் ஏற்றுவது சரியா?
ADDED :3335 days ago
சாஸ்திரத்தில் நிறைந்த அறிவும் அனுபவமும் பெற்ற பெரியவர்கள் கூறாத மற்றும் வழக்கில் கொள்ளாத விஷயங்கள் எல்லாம் தற்போது வழக்கில் உள்ளன. இந்த மாதிரியான சந்தேகத்தை எங்களிடம் கேட்கும் போது, இதைத் தவறு என்றும், செய்யாதீர்கள் என்றும் சொல்லும் போது சிலர் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் பலர் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களைத் தெளிவடையச் செய்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. இது மூடநம்பிக்கை என்று சொன்னால் கோபம் வருகிறது. ஒரு அகல்விளக்கு ஏற்றினால் போதும். கடவுள் ஏற்றுக்கொள்வார்.