உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் துவக்கம்!

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் துவக்கம்!

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா துவங்கியது.

திருமலை ஏழுமலையானுக்கு நடப்பது போல், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கும் கார்த்திகை மாதம், ஆண்டு பிரமோற்ச விழா நடந்து வருகிறது. அதன்படி,இன்று (26ம் தேதி)  பிரமோற்ச விழா துவங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்வ விழாவில், தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி ரத உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான டிசம்பர் 4ம் தேதி காலை பஞ்சமி தீர்த்தமும், மாலையில் கொடியிறக்கம் வைபவமும் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !