ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகம்
ADDED :3336 days ago
தி.நகர்: தி.நகரி, யுனைடெட் விஷுவல்ஸ் குழுவினர் சார்பில், தியாகராஜர் சுவாமிகளின் வாழ்க்கை நாடகம், தி.நகர், வாணி மஹாலில் அரங்கேற்றியது. சத்குரு தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கையிலிருந்து, சில சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து, இசை நாடகம், நேற்று மாலை நடைபெற்றது. பிரபல இசை விமர்சகர், வி.எஸ்.வி., வசனங்கள் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை பார்வையாளர்களை கட்டிப்போட்டது. டி.வி.வரதராஜன், நாடகத்தை இயக்குவதுடன், தியாகராஜ சுவாமிகளின் பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். கலைஞர்களின் கூட்டு முயற்சியால், ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைந்து, ரசிகர்களை லயிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில், முரளிதர சுவாமிகள் கலந்து கொண்டார்.