வழுதுார் ஸ்ரீமாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்
ADDED :3272 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வழுதுார் ஸ்ரீமாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம் ஜவகர் ராமசாமி அய்யங்கார் தலைமையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரகம், துர்க்கா ஹோமங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட 13 வகை சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது. கிராம நிர்வாகிகள் ராஜகோபால், ராஜா, மூர்த்தி, கனகுராஜன். தினகரன், ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர்.