உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாந்தோன்றிமலை வெங்கட்ரமணர் தேரோட்டம் கோலாகலம்

தாந்தோன்றிமலை வெங்கட்ரமணர் தேரோட்டம் கோலாகலம்

கரூர்: தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி திருக்கோவிலில் நேற்று நடந்த புரட்டாசி பெருந்திருவிழா தே÷ ராட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.கரூர் தாந்தோன்றிமலை அரு ள்மிகு கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேரோ ட்ட விழா நடந்து வருகிறது. நட ப்பாண்டு கடந்த 29 ம் தேதி துவஜாரோஹணம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 2 ம் தேதி வெள்ளி கருடசேவை, 5 ம் தேதி திருகல்யாண உற்சவமும், நேற்று குதிரை வாகன ஊர்வலமம் நடந்தது.புரட்டாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா வடம் பிடித்து தேரோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா என உரக்க கோஷமிட்டனர்.

தேரோட்ட திருவிழாவையொட்டி கோயிலை சுற்றி புரட்டாசி திருத்தேர் நண்பர்கள் அன்னதான குழுவினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று காலை 10 ம் நாள் திருநாளை முன்னிட்டு அமரவாவதி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு திருக்கொடியிறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து வரும் 10 ம் தேதி கருடசேவை, 14 ம் தேதி ஹனுமந்த வாகன ஊர்வலம், 16 ம் தேதி வெள்ளி கருட சேவை, 17 ம்தேதி முத்து பல்லக்கு, 18 ம் தேதி ஆளும் பல்லக்கு, 19 ம் தேதி புஷ்ப யாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !