உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை வசதிகள் ஆய்வு

சபரிமலை வசதிகள் ஆய்வு

சபரிமலை: சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை சபரிமலை உயர் அதிகார கமிட்டி தலைவர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். சபரிமலையில் நடந்து வரும் பணிகள் உயர் அதிகார கமிட்டி ஒப்புதல் பெற்றே நடக்கிறது. இதன் தலைவராக கேரள அரசின் ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் ஜெயக்குமார் உள்ளார். அவர் நேற்று முன்தினம் சபரிமலையில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தார். தேவசம்போர்டு அன்னதான மண்டபத்தை பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து திருப்தி தெரிவித்தார். குப்பை போடுவதற்கான பிளாஸ்டிக் தொட்டிகளை அதற்குரிய இடங்களில் வைக்க அறிவுறுத்தினார்.கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைத்தின் வெளியே கழிவு நீர் தேங்காமல் தடுக்கவும், நீர் தேங்கும் பகுதியில் மணல் மூடைகள் வைக்கவும் அவர் உத்தரவிட்டார். சபரிமலையில் தடை செய்யப்பட்டுள்ள பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. எக்சைஸ் துறையின் பரிசோதனையில் 44 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல போதையில் சபரிமலை வந்த எட்டு பேரை சன்னிதானம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !