உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரிக்காத்த ராமன்

ஏரிக்காத்த ராமன்

சென்னை - திண்டிவனம் மார்க்கத்தில் அமைந்திருக்கிறது மதுராந்தகம். இங்கே கோயில் கொண்டிருக்கும் ராமன், வெள்ளத்தால் ஏரிக்கரை உடைந்து விடாமல் காத்து நின்றதாக தல வரலாறு. இந்த ராமபிரானைப் போன்று உயரமான மூலவரை வேறெந்த கோயிலிலும் காண்பதரிது என்கிறார்கள். ஆஜானுபாகுவான தோற்றத்தில் எம்பிரான் கோதண்டராமராக கம்பீரமாக நெடிதுயர்ந்து காட்சி அளிக்கிறார். அவருக்கு வலப்புறம் அன்னை சீதாதேவியும், இடப்புறம் லட்சுமணனும் அருள்கிறார்கள். இந்த லட்சுமணன் அம்பு ஏந்திய கரத்துடன் காட்சியளிப்பது தனித்துவம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !