வரப்பட்டியில் ஐயப்ப பக்தர்களின் ஆழிபூஜை
ADDED :3251 days ago
வேடசந்துார், இ.சித்துார் ஊராட்சி வரப்பட்டியில், ஐயப்ப பக்தர்களின் ஏழாம் ஆண்டு ஆழிபூஜை (தீக்குழி இறங்குதல்) விழா நடந்தது. காலை 6 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அலங்காரம் மற்றும் ஆழிக்குழி எடுத்தல், காளியம்மன் கோயிலில் கரகம் பாலித்து சப்த கன்னிகள் நெய்விளக்கு ஏந்திவருதல், ஐயப்ப பக்தர்கள் முன் ஆலிவளர்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. இதைத் தொடர்ந்து அன்னதானம், மாலை 5:30 மணிக்கு தீக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.