கொடைக்கானலில் மழைக்காக நேர்த்திக்கடன்
ADDED :3254 days ago
கொடைக்கானல், கொடைக்கானலில் மழை வேண்டிகூழ் காய்ச்சி வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது. நாயுடுபுரம், டிப்போ பகுதியிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஆனந்தகிரி பகுதியிலிலுள்ள பெரிய மாரியம்மன் கோயிலை அடைந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரிய மாரியம்மன் கோயில் கமிட்டியினர் மற்றும் இந்து மக்கள் செய்திருந்தனர்.