உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூபாய் நோட்டு பிரச்னை சபரிமலையில் குறைகிறது: காணிக்கை வருமானம் அதிகரிப்பு

ரூபாய் நோட்டு பிரச்னை சபரிமலையில் குறைகிறது: காணிக்கை வருமானம் அதிகரிப்பு

சபரிமலை, ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட நோட்டு பிரச்னை சபரிமலையில் குறைகிறது. காணிக்கை வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவித்த சில நாட்களில் சபரிமலை சீசன் தொடங்கியதால் ஆரம்பத்தில் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதற்காக சன்னிதானத்தில் கூடுதல் ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்பட்டது. இ.காணிக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் பம்பையில் பக்தர்களை தடுத்து நிறுத்தும் அளவு கூட்டம் இருந்தது. இந்த சீசனில் நடை திறந்த பின்னர் 13.50 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு கோடி ரூபாய் அதிகமாகும். கடந்த திங்கள் அன்று மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு காணிக்கை வருமானம் வந்தது. அதிகமாக பத்து மற்றும் நூறு ரூபாய் நோட்டுகள் கிடைக்கிறது. இவை காணிக்கை எண்ணும் இடத்தில் இயந்திரங்கள் மூலம் எண்ணி சாக்குமூடைகளில் அடைக்கப்படுகிறது. காணிக்கை எண்ணுவதற்காாக 134 தேவசம்போர்டு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு ஷிப்டுகளாக பணிபுரிந்து பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !