உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப பக்தர்களுக்காக ஹோமம், அபிஷேகம்

ஐயப்ப பக்தர்களுக்காக ஹோமம், அபிஷேகம்

கரூர்: கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 30ம் ஆண்டாக ஐயப்ப பக்தர்களுக்காக, நாள்தோறும் அபிஷேகம், ஹோமம் நடக்கிறது. கரூர் ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் ஐயப்பா சேவா சங்கம் சார்பில், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம், குபேர லட்சுமி ஹோமம், ஏகதின லட்சார்ச்சனை நடத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து, ஐயப்பா சேவா சங்கத்தைச் சேர்ந்த தலைவர் கனகசபாபதி, செயலாளர் மோகன்ராம், பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் கூறியதாவது: சபரிமலை கோவிலுக்குச் மாலை அணிந்து விரதம் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக கார்த்திகை, 1 முதல் மார்கழி, 30 வரை நாள்தோறும் கரூர் ஐயப்ப சுவாமி, விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு மூர்த்தி ஹோமங்கள், பல்வேறு திரவியங்களால் அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !