திருவதிகை பெருமாள் கோவிலில் இன்று மூன்றாம் சனி சிறப்பு பூஜை
கடலூர்:பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு காலை சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மூலவர் சரநாராயண பெருமாள் நெய்தீப ஒளியில் திருப்பதி சீனுவாச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6 மணிக்கு சகஸ்தர தீப அலங்கார சேவை நடக்கிறது.வரும் 11ம் தேதி செவ்வாய் கிழமை காலை 5 மணிக்கு ஏகதின பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காலை 8 மணிக்கு அம்ச வாகன சேவை, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷச வாகனம், பகல் 12 மணிக்கு கருட சேவை, மாலை 3 மணிக்கு யானை வாகனம், சூரன உற்சவம், குதிரை வாகன சேவை, 6 மணிக்கு திருத்தேர் ஆகிய வாகனங்களில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஒரே நாளில் நடக்கும் ஏகதின பிரமோற்சவத்தில் சரநாராயண பெருமாளின் திருவருளை பெரும்படி தலைமை அர்ச்சகர் கேட்டுக் கொண்டுள்ளார்.