நாராயணி பீடத்தில் நவராத்திரி நிறைவு விழா
ADDED :5190 days ago
வேலூர்: வேலூர் அடுத்த ஓம் சக்தி நாராயணி பீடத்தில் நவராத்திரி நிறைவு விழா நடந்தது.இதையொட்டி ஒன்பது நாட்கள் அஷ்ட ஹூதி யாகம் நடந்தது. சக்தி அம்மா தலைமையில் 13 யாக குண்டங்கள் வைத்து நடந்த யாகத்தில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகத்தைச் சேர்ந்த 54 வேத விற்பனர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடந்த அஷ்ட லட்சுமி யாகம் நேற்று நிறைவு பெற்றது. சக்தி அம்மா பூர்ணாஹூதி செய்து முடித்து வைத்தார். யாகம் அணைந்ததும் அங்கிருந்த நவராத்திரி கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு நாராயணி அம்மனுக்கு சக்தி அம்மா அபிஷேகம் செய்தார். பின்னர் பெங்களூருவை சேர்ந்த நரசிம்மாச்சாரியின் பரத நாட்டியமும், வேலூர் தங்க கோவிலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த காஞ்சி காமகோடி நாட்டியாலாயா குழுவினரின் பரத நாட்டியமும் நடந்தது.