உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 21 கோவிலிலிருந்து அம்புவிடும் நிகழ்ச்சி குடந்தையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

21 கோவிலிலிருந்து அம்புவிடும் நிகழ்ச்சி குடந்தையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் விஜயதசமியை முன்னிட்டு 21 கோவில்களிலிருந்து சுவாமிகள் ஒரு சேர அம்பு விடும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு நடந்தது.
புரட்டாசி அமாவாசை தினத்தன்று ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கியது. கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர்சுவாமி, காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர், ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர், காளஹஸ்தீஸ்வரர் உள்ளிட்ட 12 சிவாலயங்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது.தொடர்ந்து மறுநாள் சாரங்கபாணி, கரபாணி, ராமஸ்வாமி, ஆதிவராக பெருமாள், மேலக்காவேரி வரதராஜபெருமாள், வேதநாராயணபெருமாள், வரதராஜபெருமாள்கோவில் உள்ளிட்ட 9 வைணவத்தலங்களிலும் நவராத்திரி திருவிழா கடந்த 28ம் தேதி தொடங்கியது.மகிசாசுரன் எனும் அரக்கன் தேவர்கள் மற்றும் மக்களை துன்புறுத்தியதால் பரமேஸ்வரியை அனைவரும் வழிபட்டனர்.

அந்த அரக்கனை அழிப்பதற்காக பரமேஸ்வரி தேவி நவராத்திரி திருவிழா நாட்களில் பரமசிவனிடம் அழிக்கும் வரத்தை பெறுவதற்காக தவம் மேற்கொண்டதாக ஐதீகம்.வரம் பெற்ற பார்வதி தேவி அரக்கனை விஜயதசமி நாளன்று அம்பு எய்தி அழித்ததாக ஐதீகம். அந்த விஜயதசமி திருநாளை வெற்றித்திருநாளாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு ஆதிகும்பேசுவரசுவாமி, காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், சாரங்கபாணி பெருமாள், கரபாணி பெருமாள், ராமஸ்வாமி, ஆதிவராஹர், பிர்மன் கோவில் வரதராஜப்பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள்கோவில்களின் பெருமாள்களும், சாமூண்டீஸ்வரி, கோடியம்மன், பழனியாண்டவர், உள்பட பல கோவில்களின் சுவாமிகள் கும்பகோணம் ரயில்வே சாலையில் சென்று தீயசக்திகளை அழிக்கும் விதமாக அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.விஜயதசமி தினத்தன்று மட்டும் அனைத்து சிவன்கோவில்கள் மற்றும் பெருமாள்கோவில்களின் உற்சவ மூர்த்திகள் உள்ளிட்ட 21 கோவில்களிலிருந்து ஒரே இடத்தில் எழுந்தருளி அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !