உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் வழிபாடு

சதுரகிரி மலையில் அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் வழிபாடு

வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் நடந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளில், அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.சதுரகிரி மலை நவராத்திரி விழா கடந்த 10 நாட்களாக நடந்துவந்தது. ஆனந்தவல்லியம்மன் தினம் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதற்காக ஏராளமான பக்தர்கள் கடந்த 10 நாட்களாக விரதமிருந்து வந்தனர். நேற்று முன்தினம் மலையில் நடந்த "அம்புஎய்தும் நிகழ்ச்சிக்கு பின், அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றார். அம்மனுக்கு பக்தர்கள் பட்டு சாத்தி, ரூபாய் நோட்டுகளில் மாலைகள் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தனர். சுந்தரமகாலிங்க சுவாமி சன்னதி சென்ற அம்மனுக்கு நீராட்டு நடந்தது. இதைதொடர்ந்து, கொலுமண்டபத்தில் அம்மன் சிலைக்குள் வைக்கப்பட்டிருந்த யந்திர தகடுகள் வினியோகிக்கப்பட்டது. இதன்பின் , மகேஷ்வரபூஜைகள் நடத்தப்பட்டு, சாதுக்களுக்கு வஸ்திரதானம், சொர்ணதானம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !